2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’அபாய நிலை குறித்து மக்களுக்கு அறிவியுங்கள்’

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

  அசாதாரணமான மரணங்களைக் கட்டுப்படுத்தும் கட்டத்தில் இலங்கை இருப்பதால், அபாயம் குறித்து உண்மையான தகவல்களைச் சுகாதாரத்துறையினர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அபாய நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே  தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகின. 5 நாள்களில் 6 மரணங்கள் புதிய கொத்தணிகளால் பதிவாகியுள்ளன.

நாம் அனைவரும் எச்சரிக்கை நிலைமையொன்றுக்கு முகங்கொடுத்துள்ளோம். செவ்வாய்கிழமை இனங்காணப்பட்ட 457 தொற்றாளர்களில் 10 பேர் தவிர ஏனைய 

அனைவரும் சமூகத்திலிருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர் என  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .