2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அமெரிக்க - இலங்கை உறவுகளில் புதிய அடையாளம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2015ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான தேர்தல்களில், இலங்கை மக்கள் வெளிப்படுத்திய தூரநோக்குக் குறித்து ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப், அது, அமெரிக்க - இலங்கை உறவுகளில் புதியதோர் உயர்ந்த அடையாளத்தை விளைவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “இலங்கையின் எதிர்காலமானது நாட்டின் வளத்தை வலுவுடையதாகச் செய்ய அதன் இளைஞர்கள் பெற்றுக்கொள்ளும் திறன்கள், அறிவினிலேயே தங்கியுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற, யூ லீட் (நீங்கள் முன்னெடுங்கள்) நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வாழ்வில் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமான உள்ளீடுகளில் ஒன்றாக இருப்பது, பாதுகாப்பானதொரு புகலிடம், மகிழ்வானதோர் இல்லம், அன்பானதொரு குடும்பம், திருப்தி செய்யும் அர்த்தபுஷ்டியான ஒரு வேலைவாய்ப்பு என்பவற்றைக் கொண்டிருப்பதாகும்.

“பல தசாப்தங்களின் பதற்றங்களுக்கும் அழுத்தங்களுக்கும் பிற்பாடு, இலங்கையர்கள், பிரகாசமானதோர் எதிர்காலத்தை நோக்கி இருக்கக்கூடியதாக உள்ளது.

“இந்த நாட்டின் இளைஞர்களின் இயலுமையும் மனித ஆற்றலும், மிகவும் ஆச்சரியமானது என நான் வாதிடுவேன். இந்த நாட்டின் இளைஞர்கள் என்ன செய்யலாம் எனப் பார்ப்பதற்கு, இந்த நாட்டின் எதிர்காலத்துக்கான அவர்களின் நோக்கு என்ன என்று பார்ப்பது ஆச்சயரியமானதே.

“இந்த மக்களின் பார்வைநோக்கால் நாம் பிடிக்கப்பட்டுள்ளோம். 2015ஆம் ஆண்டு ஜனநாயகமும் சுதந்திரமும் மிக்கதான தேர்தலில் எடுத்துரைக்கப்பட்ட மக்களின் பார்வைநோக்கால் நாம் ஈர்க்கப்பட்டுள்ளோம். அது அமெரிக்க - இலங்கை உறவுகளில் ஒரு புதிய உயர்ந்த அடையாளத்தை விளைவித்துள்ளது. இதற்கு முன் நாம் கொண்டிராத சிறந்த உறவுகளை விவாதிக்கத்தக்க முறையில் இது விளைவித்துள்ளது.

“இலங்கை மக்களின் கனவுகளையும் பார்வை நோக்குகளையும் சாதிப்பதற்கான அரசாங்கம் மற்றும் மக்கள் என்ற வகையில், எமது முழு ஆதரவையும் வழங்குவதற்கும் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இலங்கை மக்களின் வெற்றியில், நாம் முழுமையாக ஈடுபட்டுள்ளோம்.

“இளைஞர்கள் உண்மையில் இந்த நாட்டின் எதிர்காலமாக உள்ளனர். ஆகவே, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றோம். எங்களது நம்பிக்கை என்னவெனில், எதிர்காலத்தின் எமது முதலீடுகளாகவும், வளம், சந்தோசத்தின் உயர்ந்த உச்சிகள் வரைக்கும், உங்களது நாட்டை எடுத்துச்செல்வதற்கான இந்த மக்களின் நம்பிக்கையின் மூலங்களாகவும் உள்ளது.

தன்னியக்கம் அதிகரித்து வரும் உலகில், வேலை உருவாக்கமானது நிச்சயமானது அல்ல. இருந்தும், சில திறன்கள் எப்பொழுதும் தேவைப்படுவனவாகவே உள்ளன. பாடசாலைகள் சிலவற்றுக்கு உயர்தரம் அல்லது சாதாரண தரம் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையானது எல்லாம், உண்மையான திறனே” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .