2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சரவை கூட்டத்தில் சு.கவினர் பங்கேற்றனர்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னரான முதலாவது அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24), காலை இடம்பெற்றது. இதில், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். 

நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருந்த குழப்பகரமான நிலைமையை அடுத்து, கடந்த 11ஆம் திகதியன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் புறக்கணித்திருந்தனர். 

கட்சியினால் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவின் அடிப்படையில் கடந்தவார அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்ததாக தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, ​“நேற்றைய கூட்டத்தில் சு.கவினர் பங்கேற்றிருந்தனர்” என்றும் தெரிவித்தார்.  

கடந்த அமைச்சரவையை சு.கவினர் புறக்கணித்திருந்த நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அறுவர் உள்ளிட்ட 15 பேரும், பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபாலவும், அரசாங்கத்திலிருந்து மறுநாள் இராஜினாமாச் செய்துவிட்டனர்.  

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அறுவரும், தங்களுடைய பதவிகளை இராஜினாமாச் செய்த​தன் பின்னர், நேற்று (24) நடைபெற்றது முதலாவது அமைச்சரவைக் கூட்டம் என்பதனால், நேற்றைய கூட்டம் தனிச்சிறப்பானதாக அமைந்திருந்தது.  

அந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கடந்த 12ஆம் திகதியன்று நியமிக்கப்பட்ட பதில் அமைச்சர்கள் நால்வரும் பங்கேற்றிருந்தனர். அதன்போது, அடுத்த 18 மாதங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய, அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது என அறியமுடிகின்றது.  

அத்துடன், அந்த 18 மாதங்களில், அரசாங்கம் மிகவேகமாக பயணிக்கவேண்டியமை தொடர்பிலும் அமைச்சரவை அவதானம் செலுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .