2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“அமைச்சரை நீக்குங்கள்”

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வகிக்கும் அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பில் அவர் இன்று (22) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சரவை ஒழுங்குகளை மீறும் வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார். அவருடைய கருத்துகளை மீளப்பெற்றுக்கொள்ளும் பொருட்டு நேற்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

கட்சியின் செயற்குழு இது தொடர்பில் தவிசாளர் மலிக் சமரவிக்கிரமவுடன் கலந்தாலோசித்தது. தனது கருத்துகளை மீளப் பெற்றுக்கொள்வதாக தவிசாளரிடம் அவர் இணக்கம் வெளியிட்டிருந்தார். எனினும் அதன்படி அவர் நடந்துகொள்ளவில்லை. இதன்காரணமாக செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக அனைத்து அமைச்சுகளிலிருந்தும் விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .