2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அரச ஓய்வூதியம் பெறுவோரின் பிரச்சினைகளை தீர்க்கத் திட்டம்’

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரச சேவையிலுள்ள ஓய்வூதியம் பெறும் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து, அவர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை வழங்குவதற்கான தேவையான நிகழ்ச்சித் திட்டம் அடுத்த வாரத்தில் தயாரிக்கப்படும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹப்புத்தளையில், நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  

இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது மக்கள் சந்திப்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி செந்தில் தொண்டமானினால் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   

அங்கு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“இம்முறை தேர்தல் பிரசாரத்தில் முதலாவது மக்கள் சந்திப்பு நாட்டின் உழைக்கும் மக்களுடன் நடத்தக் கிடைத்தமை குறித்து தான் மகிழ்ச்சியடைவேன்.   

“இம்முறை தேர்தல் நாடு குறித்த கரிசனையுள்ள அனைவரும் ஓரணியாக இருக்க வேண்டிய தேர்தல் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது ஒருபோதும் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக அமையக்கூடாது” என்றும் சுட்டிக்காட்டினார்.   

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஹல்துமுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுகுமாரன் நாயர், ஹப்புத்தளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அசோக உதயகுமார ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .