2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரச துறைக்கு 9,851 பேர் இணைப்பு

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச துறைக்காக இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் 9,851 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்  அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார். அரச துறையின் சகல நிறுவனங்களும் தேசிய சம்பளக் கொள்கையுடன் இணைந்து கொள்வது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரச துறையை சேர்ந்த 7,750 பேர் ஓய்வு பெற்றமையினாலும்,  பதவியை இராஜினாமா செய்தமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காக இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகள் ஊடாக 7,800 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அரச துறை பற்றி இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் அரச துறை ஊழியர்கள் தொடர்பான அறிக்கையை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார் எனவும், என அமைச்சர் தெரிவித்தார்.

உரிய அங்கீகாரம் இன்றி, மேலதிக ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பாக உரிய நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்புக் கூறுவது அவசியமாகும் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X