2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசாங்கம் இயலாமையை மூடி மறைக்கிறது’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கம், கொரோனாவை காரணம் காட்டி, இயலாமை மூடிமறைக்க முயல்கின்றதென, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கருத்துகளை வெளியிடும் நபர்களுக்கு அரசாங்கத் தரப்பின் சில நபர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை, ஜனநாயகவாதிகளாக எதிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டே, இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“சாதாரண மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக செயழிலந்துள்ள சந்தர்ப்பத்தில், மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் முன்னெடுத்த சகல வேலைத்திட்டங்களும், மிகவும் ஆபத்தான முறையில் அரசியலாக்கப்பட்டுள்ளது” என்றார்.

“வழங்கும் நிவாரணப் பொதிகளில், கட்சியின் சின்னத்தைப் பொறிக்குமளவுக்கு நிலைமை கீழிறங்கியுள்ளமை துயரமான நிலையாகும். அந்தச் சின்னமானது, அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் பொருள்களில் பொறிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள செயலணி, அரசியல் நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றமை தெளிவாவதாகவும் தொற்று நோய் பரவத் தொடங்கிய நாளில் செய்ய வேண்டியதை செய்யாத அரசாங்கம் தற்போது ஆமை வேகத்தில் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு விடுக்கும் கோரிக்கைக்கு இடமளிக்காமல், அதற்கு எதிராக விடுக்கும் அறிவிப்புகள் ஊடாக, தமது உண்மையான நிலையை வெளிப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பது புலனாகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுக்கும் அச்சுறுத்தல் மூலம், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அச்சம் ஏற்படுகின்றது என்பதை உணர்வது அவசியமாகும்.

“சமூகத்தின் இடைவெளி நாட்டின் ஜனநாயகத்தை தூரமாக்குவதற்கு இடமளிக்காமல் இருப்பதற்குக் கவனம் செலுத்துவோம். எனவே, சகல ஜனநாயகவாதிகளும் இந்தச் சந்தர்ப்பத்தில் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

“மிக முக்கியமான தருணத்தில், மறைக்கப்பட்ட அரசியலைக் கண்டறிந்து அதை எதிர்ப்பதற்கும், தேசபக்தி என்று அழைக்கப்படும் சுயநல அரசியலைத் தூண்டுவதற்கும் நாங்கள் பயப்படக்கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .