2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழ்க்கட்சிகள் ஒத்துழைப்பு’

Editorial   / 2019 ஜனவரி 19 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிய அரசமைப்பை வரையும் பணிகளில், வரலாற்றில் முதல் தடவையாக, தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு தொடர்பாக, நாடாளுமன்றமத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளில், சகல அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புக்களினதும் ஆலோசனைகள் இடம்பெறுவதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சிக்கும் பௌத்த மதத்துக்கும் முதன்மைத்தானம் வழங்க தமிழ் அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

நாடாளுமன்றச் செயற்பாட்டின் மூலமே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது என்றும் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் அரசியல் கட்சிகள், அரசமைப்பைத் தயாரிக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்.

ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை, தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்றும் தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும், ஒன்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படவுள்ளது என்றும், இதன்மூலம், அரசமைப்புக்கு விளக்கம் அளிப்பதில்,  பிரச்சினைகள் ஏற்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோரின் காலத்தில், அரமைப்பு வரையும் பணிகளை, தமிழ் கட்சிகள் பகிஷ்கரித்திருந்தன எனக் கூறிய அவர், ஆனால், தமிழ் கட்சிகள் இந்தச் செயற்பாடுகளுக்கு தற்சமயம் ஆதரவு வழங்குவதாக அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .