2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அரசமைப்புச் சபைக்கு பாதிப்பு இல்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்க ப்பட்டமையால், புதிய அரசமைப்பு தயாரிப்பதற்கான அரசமைப்புச் சபையின் செயற்பாடுகளுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாதென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.  

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாடாளுமன்ற கூட்டத்தொடர், அதிவிசேடமான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், அரச நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்கு உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்​பட்ட குழுக்களின் செய்பாடுகள் இரத்தாகின.  

“இந்நிலையில், அரசமைப்புச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், “இந்த அரசமைப்புச் சபையானது நாடாளுமன்ற தெரிவுக் குழுவாகச் செயற்படுகின்றது. ஆகையால், அந்தக் குழுவுக்கு எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படாது” என்றார். 

பிரதமரே, அரசமைப்புச் சபையின் தலைவராவார். எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர், எதிர்வரும் 08ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அரசமைப்புச் சபையானது மீண்டும் கூடும் என்றும் அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .