2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அரசாங்கத்தின் ஊழல் மத்திய வங்கியிலிருந்து சர்வதேச வங்கிகளுக்கு’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“தாய்வான் வங்கியொன்றில் பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக, லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷாலிலா மூனசிங்க கைதுசெய்யப்பட்டமை, இந்த அரசாங்கத்தின் ஊழலும் கொள்ளையும், மத்திய வங்கியிலிருந்து சர்வதேச வங்கிகளுக்குச் சென்றுள்ளமையைக் காட்டுகிறது” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல். பீரிஸ், மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஷாலிலா மூனசிங்க, அரசாங்கத்துடன் தொடர்புகளைக் கொண்ட ஒருவராவார். வங்கி மீதான இணையத் தாக்குதலை மேற்கொண்டவர், இலங்கையில் உயர் பதவியை வகிப்பவராவார். அவரை யார் நியமித்தார்கள்? அவரைப் போன்ற திருடனுக்கு, அதிகாரங்களை யார் வழங்கினார்கள்? அரசாங்கத்தின் ஏனைய உயர்தரப்பினரோடு, அவருக்கு என்ன தொடர்பு காணப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இவ்வரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, சர்வதேச சதி காணப்பட்டது என்ற குற்றச்சாட்டை மீள வலியுறுத்தியதோடு, “இந்தச் சதியின் முக்கிய அம்சமாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சீர்குலைத்தல் காணப்பட்டது” என்று குறிப்பிட்டார். 

“அந்த இலக்கு, தற்போது அடையப்பட்டு வருகிறது. தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். தவிர, ஆசிரியர்களை முழங்காலில் நிற்குமாறு பணித்த, சு.க வேட்பாளர்களும், அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .