2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘அரசாங்கத்தின் தவறான வரி கொள்கையால் மதுபாவனையாளர்கள் அதிகரிப்பு’

Editorial   / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் தவறான வரி கொள்கையால் 2017, 2018ஆம் ஆண்டுகளில் மதுபானம், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென எடிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வழங்கப்பட்ட வரிச் சலுகையால்  கடந்தாண்டு மாத்திரம் 33 சதவீதமான ஆண்கள் மதுவையும் 26 சதவீதமான ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் எடிக் நிறுவனத்தின் நிகழ்ச்சி அதிகாரி அசித தர்சன தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு 25.3 சதவீதமான ஆண்கள்  மதுபாவனைக்கும் 7.7 சதவீதமான ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் உள்ளாகியுள்ளார்கள்.

சிகரெட்டின் விலையை அதிகரித்துள்ளதாகத் ​தெரிவிக்கும் அரசாங்கம் கடந்தாண்டு ஒரு வகையான சிகரெட்டுக்கு மாத்திரமே சிறிய வரியை அறவிட்டுள்ளதுடன்  40 ரூபாய்க்கு சிகரெட்டை விற்பதற்கான  சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .