2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசாங்கத்திலிருந்து சு.க நிச்சயம் வெளியேறும்’

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விரைவில் தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறும் எனவும் அதற்கான பணிகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன  லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அந்த காரியத்தை ஒரு இரவில் செய்துமுடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறும் விடயமானது அந்த கட்சியின் பிரதான எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் வலுவடையச் செய்யுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், சு.கவை மீள ஒழுங்கமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் மாநாடு கட்சியின் பலத்தை வெளிப்படுத்தும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .