2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசியல் இலாபத்துக்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்’

Editorial   / 2018 மே 22 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழியேற்படுத்திய இராணுவத்தினரை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம் என ஆளும் மற்றும் எதிர்கட்சியினரிடம் கோரிக்கை விடுப்பதாக  பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் தலைமையில் இன்று (22)  அமைச்சில் இடம்பெற்றறு.

இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் கட்சி சார்பற்று இராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். உண்மையில் பார்த்தால் தற்போதைய அரசாங்கம் இராணுவவீரர்களை நல்ல விதமாகவே நடத்துகின்றது. கடந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரை எப்படி கவனித்தார்கள் என நாங்கள் மறக்கவில்லை.

கடந்த கால அரசாங்கத்தில் இராணுவ வீரர்களை கால்வாய்களை சுத்தம் செய்ய வைத்தார்கள். ஆனால் இன்று அவையனைத்தும் மாறிவிட்டது. இரணுவத்தினருக்கு எமது அரசாங்கமே உயரிய மரியாதையை வழங்கி வருகின்றது."

பெற்றோல் விலையை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழி புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதேயாகும்.  அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதை விட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதானது நாட்டிற்கு பெரும் இலாபத்தை ஈட்டித்தரும் என்பது எனது தனிப்பட்ட எண்ணமாகும்" எனக் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .