2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’அரசியல் கூட்டணியின் சின்னம் விரைவில் வரும்’

Editorial   / 2019 ஜனவரி 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவின் தலைமையிலான அரசியல் கூட்டணியின் சின்னம் தொடர்பான ஏற்கத்தகத் தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் என, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ, நேற்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கூட்டணிக்கான சின்னமாக, தாமரை மொட்டைத் தெரிவு செய்யுமாறு, நேற்று கோரிக்கைக் கடிதமொன்றைக் கையளித்தபோதே, இது  தொடர்பாக அவர் தெரிவித்திருந்தார்.

கூட்டணியின் தன்மையைப் பொருட்படுத்தாது, கட்சியின் சின்னமாக, தாமரை மொட்டைத் தெரிவு செய்யவேண்டும் என்று, இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடைபெற்று பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியுடன், 1 வருடமாகவுள்ள நிலையில், அன்றைய தினம், இந்தத் தாமரை மொட்டுச் சின்னம் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணி உருவாக்கத்தின் போது, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைளும், தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லப்படும் என்றும் அவர், சரியான தீர்மானமொன்றை எடுப்பார் என்றும், பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .