2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘அரசியல் செய்யும் நோக்கம் எமக்கில்லை’

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்  

எந்தவொரு பிரதேசவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் செய்யும் நோக்கம் எமக்கில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி விசேட அபிவிருத்தி பணிப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன், இன்று இந்த நாட்டை பார்க்கும் போது கடந்த காலங்களில் இடம்பெற்ற எந்தவிதமான அபிவிருத்தியும் இப்பொழுது இடம்பெறுவது இல்லை என்றார். 

வவுனியா வெளிக்குளம் பகுதியில், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயம், நேற்றுக்காலை திறந்து வைக்கப்பட்டது.  

கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான வி. ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் திலீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

அந்த திறப்பு விழாவில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“கொழும்பு மாவட்டத்திலே, மாகாணசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், குறுகிய காலம் பிரதி அமைச்சராகவும் இருந்து எனது பணியை ஆற்றியிருந்தேன்” என்று தெரிவித்த அவர், அக்காலத்தில் வன்னியில் உள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்த போது, இங்குள்ள மக்களின் நிலைப்பாட்டை பார்த்த போது என்றாவது ஒருநாள் இங்குள்ள மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தேன் அந்த நிலைப்பாடு தற்போது பலித்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.  

“வன்னியில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், மிகவும் பின்தங்கிய நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையான முறையிலே சரி செய்வதற்காகதான் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்டத்துக்கான தலைமை காரியாலம், வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது” என்றார்.  

வன்னி பிரதேசத்திலே அரசியல் ரீதியாக அடி வைத்திருப்பதை பார்த்து நாங்கள் இங்கு காரியாலயம் திறந்தது பிரதேச வாதத்தை தூண்டுவதற்காகவா, சகோதரவாதத்தை தூண்டுவதற்காகவா, ஜாதி வாதத்தை தூண்டுவதற்காகவா, அல்லது மதவாதத்தை தூண்டுவதற்காகவா என்று பலர் பல்வேறான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.  

“ஆனால், நாங்கள் ஒரு போதும் அப்படி இல்லை என்று தெரிவித்த அவர், வன்னி மாவட்டத்தில் காலடி எடுத்து வைத்திருப்பது வன்னி மாவட்டத்தில் இருக்கும் பொருளாதார ரீதியாக பின்தள்ளப்பட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டுதானே தவிர, எந்த வித பிரதேசவாதத்தை செய்வதற்காகவும் இங்கு வரவில்லை” என்றார்.  

“இந்த வன்னி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வன்னி மாவட்ட மக்கள், யாழ் மாவட்ட மக்கள், மலையக மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடையே எந்தவொரு பிரதேசவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் செய்யும் நோக்கம் எமக்கில்லை என்பதை தெட்டத்தெளிவாக கூறிக்கொள்கின்றேன்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X