2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’அறிக்கையின் ஊடாக ’கை’யை பலவீனப்படுத்தக் கூடாது’

Editorial   / 2021 மார்ச் 01 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான உண்மையான காரணிகள், விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தக் கூடாது என்றார்.

மஹரகம பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், 
 
 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  தொடர்புடைய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்துவோமென நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதென ஆளும் தரப்பின்  உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் உள்ளோம் என்றார்.

'ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, முழுமையற்றதாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். இதில் எவ்வித பயனும் எத்தரப்பினருக்கும் கிடைக்கப் பெறாது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அறிக்கை தயாரிக்கப்படவில்லை. கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு  அமைய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது;. குறைப்பாடுகள் காணப்படுகின்றன' என்றார். 

 ' ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைப் பலவீனப்படுத்தவும் அககட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவைப் பழிவாங்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தியுள்ளது என்று குறிப்பிடும் செய்தி முற்றிலும் தவறானதாகும்' என்றார்.

'நல்லாட்சியில் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டமையும், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களையும் அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனை அரசியல் பழிவாங்கல்கள்' எனக் குறிப்பிட முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளைத் திருத்திக் கொள்ள, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, எதிர்த்தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .