2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

Amirthapriya   / 2018 மே 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலையின் காரணமாக மேல், தென், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (21) பலத்த மழைப் பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மாகாணங்களில் மணிக்கு 40 தொடக்கம் 45 கிலொமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (20) இரவு 9.30 மணியளவில் இரத்தினபுரி பிரதேசத்தில் மழைவீழ்ச்சியின் அளவு 222.5 மில்லிமீற்றரும், எஹெலியகொட பிரதேசத்தில் 201.5 மில்லிமீற்றரும் தெஹியோவிட்ட பிரதேசத்தில் 153.8 மில்லிமீற்றரும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நில்வலா, கிங், களு கங்கை, களனி மற்றும் பெந்தர ஆகியவற்றில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதையடுத்து, அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்வதுடன் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

மேலும் தொடரும் சீரற்ற வானிலையின் காரணமாக உயிரிழப்புக்கள் 5 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .