2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவமதிப்பு வழக்கு; ஞானசார குற்றவாளி

Editorial   / 2018 மே 25 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிமன்றில் வைத்து, அவதூறாக பேசி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறித்த வழக்கின் குற்றவாளி என, ஹோமாகம நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க, நேற்று (24) அறிவித்தார்.

மேலும், அவரது கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிட்ட நீதவான், அடையாளம் காண்பதற்கும், தண்டனை அறிவிப்பதற்குமான திகதியை இதன்போது நீதவான் குறித்தார். அதனடிப்படையில், எதிர்வரும் 14ஆம் திகதியன்று, அடையாளம் காணப்பட்டு, தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.   

ஹோமாகம நீதிமன்றில் சந்தியா எக்னெலிகொடவை, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று அவதூறாகப் பேசி அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளின் பிரகாரம், குற்றவியல் தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ், அவருக்கெதிராக ஹோமாகம பொலிஸாரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .