2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’அவரிடம் சாட்சியிருந்தால் இவ்விருவரையும் கைது செய்க’

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன், இருவருக்கும் தொடர்பிருப்பதாக, ஒருவரிடம் சாட்சியம் இருக்குமாயின், அவ்விருவரையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, அவ்விருவருக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ள புதிய சிங்கள ராவய அமைப்பு, கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுவதிலும் ஆணைக்குழுக்களை அமைப்பதிலும் அர்த்தமில்லை என்று கூறியுள்ளது.

  கொழும்பில் நேற்று (8) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவ்வமைப்பின் உறுப்பினர் மாகல்கந்தே சுதத் தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

 
'இந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்கு, கோட்டாபய  ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷவும் வழிநடத்தினர் என்றும், நிசங்க சேனாதிபதி நிதியுதவி வழங்கினார் என்றும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அசோக அபேசிங்க, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவ்வாறாயின், அவ்விருவரையும் கைது செய்து, சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும்' எனக் கோரிநின்றார். 


'அசோக அபேசிங்கவிடம் உரிய சாட்சிகள் இல்லையெனில், அவரும் நாளை கைது செய்யப்படவேண்டுமெனத் தெரிவித்த அவர், தாக்குதல்களில் 250க்கு மேற்பட்ட கத்தோலிக்கர்கள்  உயிரிழந்துள்ளனர். ஆகையால், சடலங்களின் மீது அரசியல் செய்ய வேண்டாம். சடலங்களை விற்று உண்ணவும் வேண்டாமென அசோக அபேசிங்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்' என்றார். 

கறுப்பு கொடியைப் பறக்கவிடுவதிலும் இதனை விசாரிப்பதிலும் ஆணைக்குழு அமைப்பதிலும் அர்த்தமில்லை. அசோக அபேசிங்கவிடம் சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவருடைய சாட்சியம் உறுதிப்படுத்தப்படாவிடின், அசோக அபேசிங்கவுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதுதொடர்பிலான அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பொன்றை விடுக்காவிடின்இ பொலிஸ் தலைமையகத்துக்கு இன்று (09) காலை சென்று, முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு முறைப்பாடு செய்வோம் என்று மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .