2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘அவர்களையும் அழைத்து பேசுவதற்கு இணக்கம்’

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சகலரையும், இன்னும் ஒருவாரத்துக்குள் அழைத்துப் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசமைப்பில், என்னென்ன விடயதானங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  

இந்த சந்திப்பு, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இடம்பெற்றுள்ளது.   
முன்மொழியப்பட்டுள்ள, புதிய அரசமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும். அதில், என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்பது தொடர்பில், இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. ஜனாதிபதிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில், திங்கட்கிழமை இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில், பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.   

இவ்விரு பேச்சுவார்த்தைகளிலும் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படாமையினால், இவ்வாறாதொரு தீர்மானம் எட்டப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள். இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை தனியாகவும் அதன்பின்னரே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்திப்பதற்கும் இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .