2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஸாத் சாலிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் ஆதரவு?

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பார்களென மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.

எனினும் ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் முட்டாள்கள் இல்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய முன்னர் தெரிவித்திருந்ததுடன், அஸாத் சாலியை ஆளுநராக நியமித்தவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும் அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையை முன்வைத்தவரே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தான் என மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னரே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .