2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் கல்வி செலவுகளை கிருஷ்ணா ஏற்றுக்கொண்டார்

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.​நிரோஸ்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நவோதய மக்கள் முன்னணி தொடர்ந்து சுதாகரனின் விடுதலைக்காக தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே, அம்முன்னணியின் தலைவரும்,கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்யவந்தவ​ருக்கே பொதுமன்னிப்பு வழங்கியிருக்கின்றார். அதனால் ஜனாதிபதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக போராட முன்வந்துள்ள நவோதய மக்கள் முன்னணி இதில் ஒருபோதும் அரசியல் செய்யாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், இதன்போது ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளுக்கும் பண உதவி உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: வருண வன்னி ஆராச்சி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .