2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஆபத்து அதிகமாயின் தடுப்பூசிக்கு முன்னுரிமை’

Editorial   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழ்வோருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ள ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, மற்றுமொரு தொகுதி தடுப்பூசி மார்ச் முதலாம் திகதி வந்தடையுமென நம்பிக்கை தெரிவித்தார். 

 கொரோனா வைரஸ் தொற்றுகள், இறப்புகள் மேற்படி இரு மாவட்டங்களிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளன. அதையடுத்தே,  முன்னுரிமை அளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
'தடுப்பூசி பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட செயல்முறையோ, பட்டியலோ எதுவும் இல்லை என்றும், தடுப்பூசி பெறத் தயாராக உள்ளவர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்' என்றார். 


'30 வயதுக்கு மேற்பட்ட எவரும், சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் சென்று பதிவு செய்துகொள்ள முடியும். அதன்பின்னர் தடுப்பூசி பெறுவதற்கான திகதி குறித்து, அவர்களுக்கு அறிவிக்கப்படும்' என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.


இதேவேளை, தடுப்பூசி கையிருப்பில் இருக்கும் அளவைப் பொறுத்தே, நடவடிக்கை எடுக்கப்படுவதாகவுதம் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளும் மேலதிக தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, பிற பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .