2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆறு மாதங்களில் 8 ரூபாயினால் அதிகரித்த அமெரிக்க டொலரின் பெறுமதி

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  ரூபாயுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றைய தினம் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணயங்களுக்கான இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 161 ரூபாவாக அமைந்துள்ளது.

இலங்கையின் நாணய மாற்று வரலாற்றில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 161 ரூபாய்களாக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.

கடந்த ஆறு மாதங்களில் இலங்கை நாணயத்தின் பெறுமதி 8 ரூபய்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 153 ரூபாய்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .