2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இதுவரை நல்லாட்சி; இனி அரசியல் ஆட்சி’

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி எனும் எண்ணக்கருவிலிருந்து இறங்கி, அரசியல் ரீதியான ஆட்சியமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதென, மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், பொதுமக்களுக்கு போதிய விளக்கம் இல்லாமலுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டில், முதலாம் தரத்துக்கு அனுமதி பெற்றுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வொன்று, அமைச்சர் தலைமையில், கொழும்பு - ஒபேசேகரபுர பகுதியில் நேற்று முன்தினம் (15) இரவு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றியுள்ள அமைச்சர் ரவி, நாட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், மக்கள் அவற்றை உணரவில்லையென, பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அனைவரும் இது தொடர்பில் சுய விமர்சனத்தை மேற்கொள்ளும் பட்டத்திலேயே, இதற்குத் தீர்வு கிட்டுமென்றுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தைப் போன்று, வேறு எந்தவோர் அரசாங்கமும் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர், இவ்வாறான விடயங்கள் குறித்து, ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில் காணப்படும் வரையறைகளும், அரசாங்கத்தின் பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதெனவும் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் குறித்து, ஊடகங்கள் பாரியளவு பிரசாரங்களை மேற்கொண்டிருந்ததாகவும் அவற்றோடு ஒப்பிடப்படுமிடத்து, தற்போதைய அரசாங்கத்துக்கு, அவ்வாறானதோர் ஊடக ஒத்துழைப்புக் காணப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .