2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இந்தியாவால் முடிந்ததை இலங்கை தவறவிட்டது’

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் சம அந்தஸ்தை வழங்குவதற்கு, இலங்கை தவறிவிட்ட அதேநேரத்தில், அதை இந்தியா செய்துள்ளது என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

பிரதமர் அலுவலகமும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தைப்பொங்கல் விழா, அலரி மாளிகையில் நேற்று (15) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,  

“இந்தியா, இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும், ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றபோதும், அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளபோதிலும் இலங்கையில், அது பூர்த்தியாகவில்லை என்று, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கூறியதை நான் செவிமடுத்தேன்.  

“அடுத்த வருடம் பொங்கல் கொண்டாடப்படும் போது, அனைத்து சமூகங்களையும் சேர்ந்த அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருப்பதைக் காணவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தற்போதுள்ள அரசாங்கம், பல உறுதிகளை வழங்கியது. அதில் பலவற்றை செய்தும் கொடுத்துள்ளது. ஆனால், தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், ஜனாதிபதியும் பிரதமரும் அதைச் செய்வதற்காக முயன்று கொண்டிருக்கின்றனர்” என்று அவர் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .