2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்து - லங்கா மத்தல ஒப்பந்தம் ‘40 வருடங்களுக்கு செல்லுபடியாகும்’

Editorial   / 2018 ஜூலை 20 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

ஹம்பா​ந்தோட்டை மத்தல விமான நிலையத்தை, உடனடியாகச் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க முடியாதெனத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, இந்தியாவுடனான உடன்படிக்கையை இவ்வருட இறுதிக்குள் கைசாத்திடுவது குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளதெனவும், இந்த ஒப்பந்தம், 40 வருடங்களுக்குச் செல்லுபடியாகுமென்றும் கூறினார்.   

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரைத்த  அவர், மத்தள விமான நிலையமானது, 250 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டதென்றுக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக, 65 இலட்சம் ரூபாய் மாத்திரமே வருமானமாகக் கிடைப்பதாகவும் ஆனால் அதற்கான செலவு, 25 மில்லியன் ரூபாயாகக் காணப்படுகிறது என்றும் கூறினார்.   

அதனால், குறித்த விமான நிலையத்தை உடனடியாக சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க முடியாதெனக் குறிப்பிட்ட அவர், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கான கேள்வியைப் பொறுத்து தான், சர்வதேச விமான நிலையமாக அல்லது உள்நாட்டு விமான நிலையமாக அதனை அமைப்பதா என்பது குறித்துத் தீர்மானிக்கலாமென்றுக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X