2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இன்று முதல் வீட்டு தனிமைப்படுத்தல்’

Niroshini   / 2021 மே 17 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பினும், அதற்கான நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்கள் அனைவரையும், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று, கொரோனா ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை, இன்று (17) நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்கள் தொடர்பில், சுகாதாரத் தரப்பினர் அடிக்கடி கண்காணிப்பர் என்றும் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வாறு வீடுகளில் தொற்றாளர்களைத் தனிமைப்படுத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்படவுள்ளன என்று, இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .