2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இனவாதிகளை அரசாங்கம் திருப்திப்படுத்துகிறது’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

டாக்டர் ஷாபிக்கு எதிராக போலிக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது தான் சத்தியத்தின் பக்கம் நின்று குரல் கொடுத்ததாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கும் தான் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நடைபெற்ற சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “நான் எப்போதும் அநீதிக்கு எதிரானவன். இதனாலேயே சிறுபான்மை மக்களுக்கு எதிரான விடயங்களையும் நான் எதிர்த்து வருகிறேன். இதனாலேயே நான்கு தடவைகள் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானேன்.

இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் வைத்திய பணிப்பாளர்களை இந்த அரசாங்கம் வழிநடத்துகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .