2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இனியும் இணைந்து பயணிக்க முடியாது

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தற்போது இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் தரப்புடன் இனியும் இணைந்து செயற்பட முடியாது" எனத் தெரிவித்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், வெசாக் போயத் தினத்துக்குப் பின்னர் புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தி, நாட்டை உண்மையாக நேசிக்கின்றவர்களை ஒன்றுதிரட்டி மக்களை அணித்திரள வைப்பதே இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நல்லதொரு கலாசாரம் மற்றும் நிலைத்திருக்கும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே எமது ஒரே நோக்கம் எனவும் அத்துரலிய ரத்தன தேரர்,  மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .