2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.தே.கவில் பாரிய மாற்றம்

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பாரிய மாற்றங்கள் மேற்​கொள்ளப்படவுள்ளன என அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கட்சி மறுசீரமைப்பின் போது கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதென, அறியமுடிகின்றது.  

இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படகூடுமென, அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.  

இதே​வேளை, துணை பொதுச் செயலாளர்களாக புதிய முகங்கள் இரண்டை அறிமுகம் செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதென, அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.  

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் வழக்கியிருக்கும் செய்தியைப் புரிந்துகொண்டு, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலான பின்புலத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலேயே, இந்த புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.  

கட்சி​யை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்காக, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட மூன்று குழுக்களின் பரிந்துரைகள், பூரண மறுசீரமைப்பின் போது, கருத்தில் கொள்ளப்படவுள்ளன. 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலவத்துவல ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்ட அந்த மூன்று குழுக்களின் பரிந்துரைகளின் பிரகாரம், கட்சியை அடிமட்டத்திலிருந்து புனரமைக்கவேண்டுமென பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.  

இந்தப் புனரமைப்பு நடவடிக்கைகள் யாவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கண்டி பிரதேசத்​தை மையப்படுத்தி, இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாகவே, கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாகிவிட்டன என கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X