2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இன்று தீர்க்கமானது

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியா - ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளன.  

இந்தப் பிரேரணை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இன்று (21) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

இந்தத் தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதேவேளை, அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளன எனக் கூறப்படுகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .