2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்று மின்தடை?

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 திலங்க கனகரத்ன

இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்க முன்னணியால் இன்று முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்புப் பேரணி, மாநாடு காரணமாக, இலங்கையில் இன்று மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அந்த முன்னணி, நேற்றுத் தெரிவித்தது. இந்தப் பேரணியிலும் மாநாட்டிலும், நாழு முழுவதிலுமிருந்து, அதன் உறுப்பினர்கள் பங்குகொள்ளவுள்ளதன் காரணமாகவே, இந்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக, அது தெரிவித்தது.

முன்னணியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கை மின்சார சபையின், 22,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இன்றைய மாநாட்டில் கலந்துகொள்வர் என்று தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வழங்குமாறு கோரும் எதிர்ப்புப் பேரணியை, மாநாட்டின் பின்னர் மேற்கொள்ளவுள்ளதாக, ஜயலால் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் உயர் பொறுப்பிலுள்ள சுமார் 1,200 அதிகாரிகள், சபையின் ஊழியர்களை ஏமாற்ற முயல்வதாகத் தெரிவித்த அவர், இலங்கை மின்சார சபையைத் தனியார்மயப்படுத்துவதற்கான திட்டத்தை வழங்கும் முன்மொழிவொன்று, அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"அதிகாரிகளின் நடவடிக்கைகளை, நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தொழிற்சங்க நடவடிக்கையை, நாடு இன்று அனுபவிக்கும். தேசிய மின் வழங்கலில், தடைகள் ஏற்படக் கூடும். ஆனால், மின் தடங்கல்கள், சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தார்.

மாநாட்டு நேரத்தின் போது, மின் நிலையங்கள் செயற்படும் என்ற போதிலும், கட்டண அலுவலகங்களும் ஏனைய சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தங்கள் பொறுமையின் எல்லையை அடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .