2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்

Editorial   / 2018 மே 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை - ஞானேந்திர வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தெஹிவளை - கல்கிஸை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி உறுப்பினர் ரஞ்சன் சில்வா உயிரிழந்த சம்பவம் தொடர்பான உண்மை வெளியாகியுள்ளது.

இந்தப் படுகொலையாலிகள் பயணித்த வௌ்ளை நிற கார் தொடர்பில், பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், இரத்மலானை அஞ்சு எனும் பாதாள உலகக் கோஷ்டித் தலைவரால் செயற்படுத்தப்பட்டதெனும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காயமடைந்த இருவரில் ஒருவர், மேற்படி மாநகர சபையின் ஊழியரெனவும் மற்றையவர், ஆமி சம்பத் (உக்குங்) என்றழைக்கப்படும் சரத் ஜயகொடி என்பவரென்றும், இவர்கள் இருவரும், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை லன்சியா மற்றும் இரத்மலானை ரொஹா ஆகிய இரு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு இடையில், நீண்ட காலமாக நிலவிவந்த பிரச்சினையே, இந்தச் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமெனச் சந்தேகிக்கப்படுவதோடு, சம்பவத்தில் உயிரிழந்த ரஞ்சன் சில்வா, ரத்மலானை ரொஹா​ குழுவுக்கு நிதியுதவி செய்துவந்தமைக்காகவே படுகொலை செய்யப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், இலங்கைக் கிரக்கெட் அணியின் வீரர் தனஞ்ஜய டீ சில்வாவின் தந்தையென்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .