2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இராணுவத்தை பழிவாங்க வேண்டாம்’

Editorial   / 2018 ஜூலை 20 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்   

சர்வதேச நாடுகள், இலங்கை இராணுவத்தை வேட்டையாடுவதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றதெனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் ஜயந்த சமரவீர, இராணுவப் பழிவாங்கல் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.   

இராணுவத்துக்கு எதிரான சட்டமூலங்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தை, மக்கள் தீயிட்டுக் கொழுத்தப் போவகக் கூறினாலும், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்றும், அவர் குறிப்பிட்டார்.   

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், இராணுவத்தை வேட்டையாடுவதற்கான 3ஆவது சட்டத்திருத்தம், இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது என்றும் முதலில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச சமவாயச் சட்டமூலமும் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதென்று  சுட்டிக்காட்டினார்.   

இந்நிலையிலேயே, தற்போது குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர உதவி வழங்குவதற்கான சட்டமூலத்தில், 22 திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளதாகவும் இந்தச் சட்டம், 2002ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது என்றும் இதில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், இராணுவத்தைப் பழிவாங்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது காணாமல் போனோர் அலுவலகம், தமது கடமைகளை ஆரம்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .