2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை மாணவர்களை அழைத்து வருவதில் சிக்கல்

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவிச் செல்லும் சீனாவின் வூஹான்  நகருக்கு உள்நுழையவோ அங்கிருந்து எவரும் வெளியே வருவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதனால் அங்கிருக்கும் 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாமல் இருப்பதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும் அங்கிருக்கும் இலங்கை மாணவர்களின் சுகாதார நிலை, உணவு, ஏனையத் தேவைகள் குறித்து  பீஜிங் நகரிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் ஊடாகவும் அந்நாட்டின் அதிகாரிகள்  தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X