2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'இலங்கை/இந்திய உறவுகள் 1979 மற்றும் 1980' கோப்பையும் அழித்தது பிரித்தானியா

Editorial   / 2018 மே 27 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய அரசாங்கம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200  ஆவணங்களை (கோப்புகள்) பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம்  அழித்துள்ளதாக,  தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு - 5) மற்றும்  எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

அழிக்கப்பட்ட அந்த கோப்புகளில் இலங்கையில் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதயில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் காணப்படட உறவுகள் குறித்த கோப்புகளும் உள்ளடங்குவதாக பிரிஐ (PTI) செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளபோதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம்  தெரிவித்திருந்தது.

இலங்கைத் தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்தச் செயலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அந்த கோப்புகள் எங்கு? யாரால்? எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், "இலங்கை/இந்திய உறவுகள் 1979 மற்றும் 1980" என தலைப்பிடப்பட்ட இரண்டு கோப்புகளும் அழிக்கப்பட்ட கோப்புகளில் உள்ளடங்குமென பிரிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த, இந்திய அமைதிகாக்கும் படைகளின் செயற்பாடுகள் மற்றும்  இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர (அந்த சந்தர்ப்பத்தில்) தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்வதற்கும், குறித்த கோப்புகள் ஆதாரமாக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .