2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை, இந்தியா மீது மீண்டும் ஐ.எஸ் எச்சரிக்கை

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்காலத்தில் ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படுமென இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியப் புலனாய்வு பிரிவு இந்தியாவின் பொலிஸ் பிரதானிகளுக்கு 3 கடிதங்கள் ஊடாக இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈராக், சிரியாவில் தமது பலங்களை இழந்துள்ள ஐ.எஸ் அமைப்பின் கவனம் இந்து சமுத்திர வலயத்தை நோக்கி திரும்பியுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள குறித்த எச்சரிக்கை கடிதம் ஊடாக, இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தாக்குதல் நடத்தப்படக்கூடிய இடங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவின் கேரளா மாநிலத்தில் குறைந்தது 100 பேர் வரை கடந்த சில வருடங்களில் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X