2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு தயாசிறி​யே பொறுப்பு’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் துறையை அழித்தது இந்த அரசாங்கம் என்றும், இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் தயாசிறி ஜயசேகர என கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தயாசிறி தான் சூதாட்டக்காரர்களை கிரிக்கெட்டுக்குள் கொண்டு வந்தார் என்ற போதிலும், இன்று அவரே சூதாட்டம் தொடர்பில் கதைக்கின்றார். இதனால் தான் தயாசிறியை மக்கள் “புக்கிசிறி” என அழைக்கத் தொடங்கியுள்ளனரென அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அர்ஜுண,  தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? அவர் தான் ஒரு சட்டத்தரணி எனக் கூறினாலும், சட்டத்தை படித்து தெரிந்துக்கொள்ளாமல்,  கிரிக்கெட் நிர்வாகத்துக்குள் சூதாட்டக்காரர்களை வரவழைத்தார்.

இன்று சூதாட்டக்காரர்களே அனைத்து விளையாட்டையும் அழிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X