2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இலங்கை முழுமையாக செயற்படுத்த வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, இலங்கை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாகச் செயற்படுத்தலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவில் மாற்றம் ஏதுமில்லை என, கொழும்பிலுள்ள ஐரோப்பி ஒன்றிய அலுவலகம் கூறியது.

நீதி வழங்குதல் என்பது, பாதிக்கப்பட்டவர்களை இருதயத்தில் கொண்டுள்ளதோடு, தேசிய நலனுக்கும் வழிவகுக்கும். இது, முக்கியமானது என, ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.  a

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானங்களைச் செயற்படுத்துவதை கவனிக்கவென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படவிருந்தது. 

இந்தக் குழுவுக்கு உதவவென, அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றையும் தனது தலைமையிலான அமைச்சர் குழுவான்றையும் அமைக்க வேண்டும் என, பிரதமர் முன்வைத்த யோசனையை அமைச்சரவை, ஜூன் மாதம் அங்கிகரித்தது. 

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில், 2015இல் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளைச் செயற்படுத்த இலங்கைக்கு மேலும் இரண்டு வருடம் வழங்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .