2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கைக்கு 94ஆவது இடம்; முதலிடத்தில் சிங்கப்பூர்

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகலாவிய ரீதியில் 199 நாடுகளுக்கு இடையிலான, கடவுச் சீட்டு தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை 94ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

39 புள்ளிகளைப் பெற்று பங்களாதேஷ், ஈரான் மற்றும் எரிடேரியா  ஆகிய நாடுகளுடன் 94ஆவது இடத்தை இலங்கை கடவுச் சீட்டு பகிர்ந்துகொண்டுள்ளது.

இந்த பட்டியலில், சிங்கப்பூர் 164 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 163 புள்ளிகளுடன் தென்கொரியா இரண்டாம் இடத்திலும், ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 162 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடுகளின் திறந்த வீசா (visa-free) கொள்கையை அடிப்படையாக வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்படுவதோடு, passportindex.org என்ற நிறுவனம் இந்தத் தரப்படுத்தலை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த 199 நாடுகளின் கடவுச் சீட்டுகள், 100 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் தரப்படுத்தல் இடங்களை தமக்குள் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .