2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையர்களை கொண்டுச்சென்ற மூவருக்கு சிறை

Editorial   / 2019 மே 18 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை, படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு, 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என, ரீயூனியன் தீவின் ஊடக நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல், 273 இலங்கையர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றுள்ளனர் என்றும் அதில் 130 பேர், இன்றும் அத்தீவில் வசித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சமீப ஆண்டுகளாக அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வியடைந்து வரும் நிலையிலேயே, பிரான்ஸின் தீவுப்பகுதிக்குச் செல்லும் முயற்சியில் இலங்கையர்கள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இது ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய பிரஞ்சு அரசு, அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்து 120 பேரில் 60 பேரை நாடுகடத்தியது. இந்த சூழலில், இவர்களை அழைத்துச் சென்ற 3 இந்தோனேசிய படகோட்டிகளும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு துணைப்புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .