2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

’இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானியாத் தயார்’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வழங்கப்படும் சலுகைகளை மேலும் அதிகரித்து  இலங்கையில் பல நேரடி முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானியா அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும், அதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதாகவும் சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் லியாம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (18) பிற்பகல் லண்டன் நகரில் சந்தித்த லியம் பொக்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்துதல் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த லியம் பொக்ஸ், இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பிரித்தானிய சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்திலும் உள்ளடக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  தற்போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுலாத் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சகல நாடுகளுடனும் நட்புறவினை கட்டியெழுப்பிய வண்ணம் இலங்கை அரசாங்கம் பின்பற்றிவரும் நட்புறவான வெளிநாட்டு கொள்கையினூடாக தாய்நாட்டிற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மின் உற்பத்தி துறையில் புதிய முதலீடுகள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் விவசாய மற்றும் கால்நடை வளங்கள் தொடர்பாகவும் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

பிரித்தானிய அரசாங்கத்தினால் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றியை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .