2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 20 வருட சிறை

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக, இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரி அதில் 1 ½ இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிற்காக, பாடசாலை அதிபருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் அபராதமாக 20,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவரை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் போதே, மாணவரின் தந்தையிடம்  அதிபர் குறித்த தொகையினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிபராக கடமையாற்றிய கலுஆராச்சிகே தயாவதி (47) என்பருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .