2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலஞ்சம் பெற்ற இருவருக்கு 10 வருட கடூழியச் சிறை

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(19) 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் அரச நிருவாக உதவியாளர் ஆகிய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காணி ஒன்றிலிருந்து மண் அகற்றும் செயற்பாட்டிற்கு நபரொருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் அதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சம்மாந்துறை விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய அப்துல் கபூர், மற்றும் அங்கு அரச நிருவாக உதவியாளராக சேவையாற்றிய உதுமான் லெப்பே மொஹமட் இக்பால் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .