2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இவர்கள் புலிகள் அல்லர் ; நரிகள்’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜனவரி 15 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது பிரதேசத்தில் பல விதவைகளை உருவாக்கியவர்கள், ‘புலிகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, அரசியல் செய்கிறார்கள். இவர்கள், புலிகள் அல்லர்; நரிகள்” என, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு - அம்பாறை இணைப்பாளர் க.பிரபாகரன் தெரிவித்தார்.   

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அலுவலகத்தை, நேற்று முன்தினம் (13) மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தேசியத் தலைவரால் அமைக்கப்பட்ட அமைப்புகளில் முக்கியமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.   

“இன்றும் சோரம் போகாது, விலைபோகாது, அடிபணியாத தனித்துவமாக தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கக்கூடியவர்களை ஒருங்கிணைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.   

“இவர்களுடன் இணைந்து, எங்களது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக, ஜனநாயகப் போராளிகள் கட்சி கைகோர்த்துள்ளது.   

“புலிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி, சிலர் அரசியல் செய்கிறார்கள். இவர்கள், புலிகள் அல்லர். தயவுசெய்து புலிகள் என்ற சொல்லை நீக்க வேண்டும். கடந்த காலங்களில் இவர்களின் அட்டகாசங்கள், ஆக்கிரமிப்புக்கள் எவ்வாறு இருந்தது என்பதை, மக்கள் அனுபவ ரீதியாக அறிவார்கள். இவர்களது காலத்தில் எல்லைக் கிராமங்களில் பல காணிகள் பறிபோயுள்ளன.  

“தேர்தலில் வெற்றிபெற்று, மக்களுக்கு அபிவிருத்தி செய்வது இவர்களின் நோக்கம் அல்ல. தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறார்கள்.  

“எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், தமிழ் மக்கள் இருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுக்கின்ற கோரிக்கைகளை, சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் நிராகரிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளன” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X