2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இவ்வருட இறுதிக்குள் 100% வரி அதிகரிப்பு’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட இறுதிக்குள், 100 சதவீதமளவில் வரி அதிகரிப்பு இடம்பெறுமென எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, மிகவும் ஆபத்தான கட்டத்தில் இந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கிறது.  

பெலியத்த பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, அதிகளவு வரி அறவிடும் அரசாங்கமொன்று, இதுவரை​ இலங்கையை ஆட்சிசெய்யவில்லை என்றும், அந்த சாதனையை, தற்போதைய அரசாங்கம் முறியடித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டை தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் போது, அரச வரி வருமானம், ஒரு ட்ரில்லியனாக காணப்பட்டதென்றும் தற்போது அந்தத் தொகை, இரண்டு ட்ரில்லியனாக அதிகரித்துள்ளதென்றும், மஹிந்தானந்த எம்.பி கூறினார்.  

இவ்வருட இறுதிக்குள், நூற்றுக்கு நூறு சதவீதமளவில், வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமென்றும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வங்கியில் வைப்பிலிடும் போதும் அதே பணத்தை மீளப்பெறும்போ​துமென ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வரி அறவிடும் நிலைமையே, தற்போது இந்த நாட்டில் உள்ளதாகவும் கூறிய அவர், பிணத்துக்கு மாத்திரம் தான் இன்னும் வரி அறவிடப்படவில்லை என்றும் அதனால் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப, நல்ல நேரம் பார்த்துகொண்டு இருக்காமல், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .