2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உதயங்க வீரதுங்கவை நாடு கடத்துவதில் சிக்கல்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, நாடு கடத்த ஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளது.

அமெரிக்காவுக்குச் செல்லும் வழியிய், டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரதுங்க தடுத்து வைக்கப்பட்டார். இதைனையடுத்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும், இலங்கைக்கும் இடையில் நாடு கடத்தல் தொடர்பான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ள போதிலும், அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X