2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

உமாஓயாவுக்கு எதிராக இன்று கறுப்பு ஹர்த்தால்

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உமாஓயாவின் பன்முக அழிவுத் திட்டத்துக்கு எதிராக, மத்திய மலைநாட்டின் கிழக்கு சாய்வில் மாபெரும் கறுப்பு ஹர்த்தாலை இன்று (28) ஆரம்பிக்கவுள்ளதாக, உமாஓயாவின் பன்முக அழிவுத் திட்டத்துக்கு எதிரான முன்னணியின் ஏற்பாட்டாளரும் ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி உறுப்பினருமான சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.  

பண்டாரவளை நகரை அண்மித்த சுமார் 20 கிராமங்களில், இந்த ஹர்த்தால், இன்று காலை 9மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, நாள் முழுவதும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

உமாஓயாவின் பன்முக அழிவுத் திட்டத்தை எதிர்த்து முன்னெடுக்கப்படும், கறுப்பு ஹர்த்தாலினால், நகரத்தில் உள்ள கடைகள் யாவும் மூடப்படும். மரக்கறி மொத்த விற்பனை நிலையம் மூடப்படும். ஏனைய நாளாந்த நடவடிக்கைகள் யாவும் பாதிப்படையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த உமாஓயாவின் பன்முக அழிவுத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறும், எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கின்ற அழிவுகளை தடுக்குமாறும், மூடப்பட்டுள்ள மிகப்பிரமாண்டமான சுற்றுச்சூழல் தொகுதியை மறுசீரமைக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.   

இந்த வேலைத்திட்டத்தினால், மத்திய மலைநாட்டின் கிழக்கு சாய்வு, பாரிய அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது. 7,000 வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளன. குழாய் கிணற்று நீருற்றுகள் பாதித்துள்ளன. மலைகள் சரிந்து விழுந்துள்ளன. 3112 சிறிய குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. 

பண்டாரவளை நகரில், 4 அல்லது 5 அல்லது 6 மாடிகளைக் கொண்ட கட்டடங்கள், இரண்டு மூன்று அடிகளுக்கு தாழிறங்கி, சாய்துள்ளன. இவ்வாறு இன்னும் பல அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .