2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உரிய தீர்வை வழங்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலையற்றப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை விரைவில் வழங்காவிட்டால், மீண்டும் ஆர்ப்பாட்டப்  பேரணிகளை முன்னெடுப்பதாக, ஒருங்கிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி அவர்கள் நேற்று (14) தேசிய கொள்ளை மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, எதிர்வரும் 30 தினங்களுக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தெர்வு இடம்பெறவுள்ளதாக, அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை அதிகாரிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில், மீண்டும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாக,  ஒருங்கிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர், தென்னே ஞானானந்த தேதர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X